30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு… கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!
30 ஆண்டுகளாக சத்தமின்றி குழந்தை திருட்டு... கலரை வைத்து விலை சொன்ன செவிலியர்..!
கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை திருடி செவிலியர் ஒருவர் விற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடு போவது, குழந்தையை விற்பது போன்ற அவலங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த வேலையைக் கடந்த 30 ஆண்டுகளாகத் தங்கு தடையின்றி ஒருவர் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செவிலியராக பணியாற்றி வந்த அமுதா என்பவர் ஆண் குழந்தை 4 லட்சம், பெண் குழந்தை 3 லட்சம் என்ற ரீதியில் குழந்தைகளை விற்று வந்துள்ளார். அதிலும் குறிப்பாக குழந்தையின் நிறம் மற்றும் எடையை பொறுத்தும் விலையை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் 70 ஆயிரம் கொடுத்தால் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ...
