ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: கொரானாவுக்கு தடுப்பூசி ரெடி

கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

கொரானா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக அறிவித்த ரஷ்யா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார். இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார். தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்க...
கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி!

கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனைக்கு ICMR அனுமதி! கொரானா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு...