கொரானா சுவாரஸ்யம்… கடைக்கு போய் காதல் மனைவியோடு வந்த மகன்… சைக்கிளில் போய் கல்யாணம் செய்த வாலிபர்!
கொரானா சுவாரஸ்யம்... கடைக்கு போய் காதல் மனைவியோடு வந்த மகன்... சைக்கிளில் போய் கல்யாணம் செய்த வாலிபர்!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்து கொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்து இவர் மட்டும் வீடு திரும்பினார்.
இதற்கிடையில் எப்படியும் திருமண சான்றிதழ் வாங்கிவிடலாம் என்ற முயற்சி கொரானாவால் தடை பட்டது.
இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அ...

