திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!
திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை... சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!
கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது.
இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நா...


