செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

 

 

நிவாரண உதவிகள் வழங்க எதிர்க்கட்சிகள், தன்னார்வலர்களுக்கு கடிவாளம் போட்ட தமிழக அரசு!

கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பித்து இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரண உதவிகளை பலரும் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலை நீடிப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பலரும் களம் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவும் என கூறப்பட்டதால் தன்னார்வலர்கள் செய்யும் நிவாரண உதவிகளை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


அதோடு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதோடு, “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும், நிவாரண பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் தரலாம்.

அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தவி மற்ற  மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை வழங்கலாம்.  சில நபர்கள், அரசியல் கட்சி, கட்சி உறுப்பினர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல்.

ஏற்கனவே சமைத்த உணவை வழங்கக்கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். இப்போது நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும் அரசு தடை விதித்து உள்ளது. மேலும், அப்படி உதவி செய்வது தனிநபர் இடைவெளி பாதிக்கிறது” என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த சூழலில் அரசின் உதவிகள் கிடைக்காமல் தடுமாறும் நிலையில் எதிர்க் கட்சிகளும், பல தன்னார்வல அமைப்பின் உறுப்பினர்களும் செய்யும் உதவிதான் மக்களை கொஞ்சமாக மூச்சுவிட வைக்கிறது.
இப்போது அதற்கும் தமிழக அரசு கடிவாளம் போடுவதால் பாதிக்கப்படப்போவது என்னமோ ஏழை எளிய மக்கள் தான்.

851 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன