புதன்கிழமை, ஜூலை 29
Shadow

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

 

 

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது.

இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நாளை நடைபெற இருந்த நிலையில் அந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்க மறுத்து கூட்டம் நடத்த தடை விதித்து இருக்கிறார்கள்.

காரணம் கொரானா பரவலை தடுக்க இந்த நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும், கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்தி கொள்ளலாம் என போலீஸ் கூறியுள்ளார்கள்.

கூட்டத்துக்கு போலீஸ் தடை விதித்தற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்தது உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்துக்கு தடையா?

பிரதமர் நரேந்திர மோடி எப்படி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி நடத்த முடிந்தது?

இந்தியாவின் பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்துகின்றனரே, தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?

எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் என வைகோ கூறியுள்ளார்.

584 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன