புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: கோடை வெயில்

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்குமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை,' தமிழகத்தில் விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்பதால் *அடுத்துவரும் 2 தினங்களுக்கு மக்கள் யாரும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலையில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியஸும் குறைந்தபட்ச வெப்ப...
ஸ்… அப்பாடா… நாளையுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…

ஸ்… அப்பாடா… நாளையுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்துவந்த நிலையில், 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. கோடை வெயிலுக்கே நொந்து போயிருந்த மக்கள், தகிக்கும் ‘கத்திரி’ வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளாகினர். எப்போதும் வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். கத்திரி வெயிலுக்கு பயந்து பகலில் வீடுகளிலேயே மக்கள் பலர் முடங்கினர். வழக்கமாக கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை. குறிப்பாக சென்னையில் மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தை நோக்கி வந்த ‘பானி’ புயலும் திசைமாறி சென்றதால் காற்றில் இருந்த ஈரப்பதமும் போய் அனல் காற்று அதிகரித்தது. தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து...