சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!
சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்!
லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!
கர்நாடகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதா? அமைச்சர் முதல்வர் மாறுபட்ட கருத்தால் சர்ச்சை!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை மந்திரி மதுசுவாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் மருத்துவ நில...
