புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!

 

சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்!
லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!
கர்நாடகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதா? அமைச்சர் முதல்வர் மாறுபட்ட கருத்தால் சர்ச்சை!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை மந்திரி மதுசுவாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் மருத்துவ நிலைமை ஆபத்தாக நிலையில் உள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக கவலைப்படுகிறோம்.
நாங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சித்தாலும், அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு கடினமான பணியாக உள்ளது. எங்கோ நிலைமை கைமீறி செல்கிறது’ என்று கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அமைச்சர் மதுசுவாமியின் கருத்தை மாநில முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஷ்வந்த்நாராயண், மருத்துவக் கல்விதுறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் கடுமையாக மறுத்தனர். அதோடு ‘மாநிலத்தில் எங்கும் சமூக பரவல் இல்லை’ என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அமைச்சரின் கருத்தும் அதை மறுத்து மாநில முதல்வரின் கருத்தும் கர்நாடக அரசியலை தாண்டி நாடுமுழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆயிரம் பாதிப்புகள் உயர்ந்ததும் அதை சமூக பரவலாக மாறிவிட்டதோ என வருத்தப்படும் அமைச்சருக்கு மத்தியில் தமிழகத்தில் லட்சத்தை தாண்டி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனாலும் தமிழக முதல்வர் ‘இன்னமும் வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை’ என்று திரும்ப திரும்ப சொல்லி வருவது குறிப்பிடதக்கது.

875 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன