சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

 

 

நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பின் மரணம் அடைந்தார்.

இவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் புதைக்கப்பட்டது. அங்கு சுமார் 50 கோடி செலவில் பிரமாண்டமான நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த ஜெயலலிதா நினைவு மண்டபம் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது.

பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் அனைத்தும் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு வைரஸ் பாதிப்பு நேரத்திலும் பணிகள் நடந்து வருகிறது.

நினைவு மண்டபம் வரும் நவம்பரில் கட்டி முடிக்கப்படும் என்றும், இதை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15ம்தேதி வைரஸ் ஒழிப்பு தடுப்பூசி வெற்றிகரமாக அறிமுகம் ஆனால் நவம்பரில் பிரதமர் மோடி சென்னை வந்து ஜெயலலிதா நினைவு மண்டபத்தை திறந்து வைப்பார்.
அல்லது காணொலி காட்சி மூலமாக திறந்து வைப்பார் என்கிறது கூடுதல் தகவல்.

494 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன