வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: சுரேஷ் கிருஷ்ணா

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டியர...