வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு! மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது....
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை! முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்....
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார். ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் உயர் போலீ...
22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
22-வது ஆண்டு வெற்றி விழா: கார்கில் போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி! 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதன் 22-வது வெற்றி விழா இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போர் நினைவுச் சின்னம் கார்கிலில் உள்ள டராஸ்சில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கார்கில் போரில் 559 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னத்தில் 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன. முதலாவதாக இன்று காலை முப்படை தளபதி பிபின்ராவத் கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக டராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிற...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்! தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். இந்த சந்தி...
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனைகள்தான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு சென்றதை கேள்விப்பட்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேரில் சென்று நலம் விசாரித்தார்....
நர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன்  ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! .

நர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! .

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடியஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! . ரக்‌ஷாபந்தன் விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நர்சுகளுடனான கலந்துரையாடலின்போது, அவர்கள் ஜனாதிபதி கையில் ராக்கி கயிறு கட்டி, வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை பணியில் தங்களது அனுபவங்களை நர்சுகள் ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர். அதை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, அவர்களது சேவையை பாராட்டினார். நர்சுகளை ‘மீட்பர்’ என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறுகையில், “தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், மக்கள் உயிரை காப்பாற்றி வரும் ஒட்டுமொத்த நர்ஸ் சமுதாயத்தையும் வாழ்த்துகிறேன். இந்த கடமை உணர்வுதான் அவர்களுக்கு மரியாதை பெற்றுத் தருகிறது” என்றார்....