புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஜிவி பிரகாஷ்

சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்!

சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதுதவிர பாலா இயக்க உள்ள புதிய படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதோடு, அப்படத்தை தயாரிக்கவும் உள்ளார். சூர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சூர்யா - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து 2 படங்களில்...
தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், டி43 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் தனுஷின் பிறந்தநாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போ...
சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்!

சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்! இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்த ஜிவி பிரகாஷ், ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிக்கும் நபரின் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் ...
சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்ச்சை காட்சிகள்... ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்! ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர். படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர். பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்...
தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!

தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்! கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து, ஓடிடி-யில் படங்கள் நேரடியாக வெளியிடப்பட்டன. அதேபோல் யோகிபாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’ ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது நேரடி டி.வி. வெளியீட்டிற்காக தயாராகி உள்ள படம் ‘வணக்கம்டா மாப்ள’. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் வெளியீட...
ரிலீசுக்கு ரெடியான ஜிவி பிரகாஷின் பேச்சிலர்!

ரிலீசுக்கு ரெடியான ஜிவி பிரகாஷின் பேச்சிலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜீவி பிரகாஷ் குமாரின் “பேச்சிலர்” விரைவில் திரையில் ! Axcess Film Factory தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் “பேச்சிலர்” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பத்திரிக்கையாளர்களுடன் இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் G.டில்லிபாபு கலந்துரையாடினர். Axcess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது.... எங்கள் நிறுவனத்தின் சார்பில், தரமிகுந்த கதைகளை மட்டுமே தொடர்ந்து தயாரித்து வருகிறோம். வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படங்களையே இது வரையிலும் அளித்து வந்திருக்கிறோம். இந்த திரைப்படமும் அந்த வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும். இந்தப்படம் வயது வந்தோர் மட்டுமே, பார்க்கும் தன்மை கொண்ட படமல்ல. இத்திரைப்படம் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் அழகான கமர்ஷியல் படமாகும். “ஓ மை கடவுளே” போன...