சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ஜெயராஜ் பென்னிக்ஸ்

ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

ஏற்கனவே இதுபோன்ற புகாரில் சிக்கி பணிமாறுதல் பெற்றவராம் சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சஸ்பெண்ட் ஆன சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கமே சிக்குபவர்களை அடித்து துவைப்பதுதானாம்! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்ட...
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் அப்பா, மகன் மரண வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. அப்பா, மகனை அடித்து கொன்றதாக சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பொது மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் உண்மையான நிலையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இப்போது இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அனுமதியுடன் CBI வசம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்....
சாத்தான்குளம் அப்பா,மகன் மரணத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிக்கை

சாத்தான்குளம் அப்பா,மகன் மரணத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பு – மு.க.ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்தரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில...