புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: டிஸ்கவரி

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்....
காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது உடனே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை திரும்பினர்....