வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

ரஜினியின் சாகச நிகழ்ச்சி விரைவில்..!

 

டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.

தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

310 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன