செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

 

 

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!!

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

அப்படிபட்ட இசை பிரியர்களை மகிழ்ச்சிபடுத்த அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்கி உள்ளது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் ரேடியோ சேவையை துவக்கியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ரேடியோ சேவையை துவக்கி வைத்தார்.

இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை தினந்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்.’ என்று கூறினர்.

சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகள் புது அனுபவத்தோடு வழங்க இருக்கிறார்கள்.

உலகம் முழுதும் தமிழ் மொழிக்கு தனி அடையாளம் இருக்கிறது. இந்த ரேடியோ நிகழ்ச்சிகளும் தமிழில் ஒலிபரப்பாவதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணையத்தில் இந்த நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதால் உலகம் முழுதும் இவர்களின் ஆப் மூலமாக கேட்க முடியும்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

1.Rj Porco for Vanakam USA and Manadhin Neram
2. Rj Shobana for just Relax please and tea kada bench
3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.
4. Rj Rishi for Oora Suthalam Vanga
5. Rj Sathish for Daily Diary with Legend Story.
6. Rj Tamiz for Cinewood and Political Corner.
7. Rj Thendral for Vetti Neayam and Political Corner
8. Rj Ramesh for Podu Thileley
9. Rj Anbarasi Voice over Artist

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் எங்களை தொடர்புகொள்ள

www.universalradio.live

487 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன