வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

 

 

இந்தியன் 2 ஷூட்டிங்கில் பயங்கர விபத்து கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலி, இயக்குநர் ஷங்கர் உட்பட 10 பேர் காயம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி பூந்தமல்லியை அடுத்த ஈவிபி செட்டுக்குள் எடுக்கப்பட்டு வருகிறது.

கலை இயக்குனர் முத்துராஜா பிரமாண்டமான செட் அமைத்து வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரமாண்டமான கிரேன் எதிர்பாராமல் அறுந்து விழுந்து ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அஜீத் நடிக்கும் வலிமை ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அஜீத் காயம் அடைந்தார். வலிமை ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதற்கு முன் இதே ஈவிபி செட்டுக்குள் விஜய் நடித்த பிகில் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படப்பிடிப்பில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

794 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன