எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் தமிழக அரசுக்கு TR எச்சரிக்கை
நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.
ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி.
மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது Extra வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.
மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ் நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ் நாடு என்ன தனி தீவா? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா காவா?
இதே கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலுருந...
