கடைசி போட்டியில் அபார வெற்றி… இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா!
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில், முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா, கேப்டன் கோலி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது
திகபட்சமாக கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.
இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்...
