டெக்னீசியன் யூனியன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா பெப்சி தலைவர் செல்வமணி!
பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறாரா ஆர்.கே.செல்வமணி!
கொரானா என்ற கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸ் தாக்குதல் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ளது.
திரையுலகமும் ஒட்டுமொத்த இயக்கத்தையும் நிறுத்தி விட்டது. வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவ பெப்சிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
இது தவிர பலர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி இருக்கிறார்கள்.
பெப்சியில் அங்கம் வகிக்கும் சினிமா சங்கங்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கிலோ அரிசி மூட்டைகளும், தலா 500 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.
பெப்சி தலைவராக உள்ள ஆர்.கே.செல்வமணி தலைவராக வந்ததில் இருந்தே அவரை எதிர்த்து தேர்தலில் வேலை செய்தவர்களை புறக்கணித்து வருகிறார் என்ற க...
