கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் – டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு
கொரானா ஒழிப்புக்கு நிவாரண நிதி கொடுத்தால் ஹாலிவுட் படத்தில் என்னோடு நடிக்கலாம் - டைட்டானிக் ஹீரோ அறிவிப்பு
உலகம் முழுதும் நடிகரை பார்க்க வேண்டும், அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது.
அதிலும் இப்படி போட்டோ எடுத்துக் கொள்ளவும், ஷூட்டிங் பார்க்கவும் பலர் பணம் கொடுப்பது தனிக்கதை.
அதில் பிரபலமான நடிகரின் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் எவ்வளவு பணம் கொடுக்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக தினம் தினம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானாவை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் உலகம் முழுதும் நிவாரண நிதி வசூல் நடை பெறுகிறது.
திரையுலக பிரப...
