திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா?
திருப்பூர் போலீசார் வெளியிட்டு வைரல் ஆன டிரோன் கேமரா வீடியோ நிஜமா?
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கொரானா விழிப்புணர்வு, ஊரடங்கு மீறுபவர்களை பிடித்து தண்டிக்கும் காட்சிகள் என ஒரு நாளைக்கு குறைந்தது நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வாட்ஸ் அப் மூலம் வலம் வருகின்றன.
அதில் சில வைரல் வீடியோவாக ஆவதுண்டு. அப்படி திருப்பூர் காவல்துறை கழுகு பார்வை என்று சொல்லப்படும் டிரோன் காமிரா மூலமாக நகரை கண்காணிக்கும் போது பொட்டல் வெளியில் கேரம் விளையாட்டு ஆடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் டிரோன் கேமராவை பார்த்து பதறி சிதறி ஓடுவார்கள். அதில் ஒருவர் அந்த கேரம் போர்டை தலையில் தூக்கி சுமந்து கொண்டு ஓடுவார். இரண்டு பேர் அங்கே நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலரை எடு...
