முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை ! அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!
முதல்வர் நிவாரண நிதிக்கு பெப்சி நன்கொடை !
அதிகாரதுஷ்பிரயோகம் செயதாரா செல்வமணி!!
கொரானா என்ற கொடிய உயிர்க்கொல்லி அரக்கனால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுதும் பலியாகி கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலும் வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எல்லா தொழிலும் முடங்கி உள்ளது.
பொழுதுபோக்கு துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்டுள்ள தமிழ் திரையுலகமும் முடங்கி தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் திரைத்துறை தொழிலாளர்களின் கூட்டமைப்பான பெப்சிக்கு உதவி செய்யும்படி அதன் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்று ரஜினிகாந்த் 50 லட்சம், அஜீத் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், சூர்யா-கார்த்தி, சிவகார்த்திகேயன் தலா 10 லட்சம் என பலரும் நிதி உதவி அளித்தனர். அதோடு தயாரிப்பாளர் தாணு, நடிகர் ஜீவா உட்பட பலரும் நூற்றுக்கணக்கான அரிசி மூ...
