Saturday, July 4
Shadow

Tag: நயன்தாரா

பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா… சுவாரஸ்ய பின்னணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  பெப்சிக்கு 20 லட்சம் நிதி கொடுத்த நயன்தாரா... சுவாரஸ்ய பின்னணி..! உலகையே அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து இருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பால் மனித குலமே ஆட்டம் கண்டுள்ளது. இந்த சிக்கலில் உலகின் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்துள்ளது. இந்த சிக்கலில் தமிழ் திரையுலகமும் முற்றிலும் முடங்கி உள்ளது. திரைத்துறை சங்கங்கள் இணைந்துள்ள பெப்சி உதவி கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் பேரில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட சிலர் பணமாகவும் அரிசி மூட்டைகளாகவும் கொடுத்தனர். இந்த நிலையில் வந்த நிதியும், பொருட்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை எனவே மீண்டும் நிதி கேட்கபட்டது. தமிழ் திரையுலகில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள்...
வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு "ரெய்டு" பயமா?! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி. பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு. ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா! விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்...
நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக “கர்ஜனை” செய்யும் த்ரிஷா..!

நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக “கர்ஜனை” செய்யும் த்ரிஷா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாரா வழியில் திகில் ஆக்‌ஷனில் சிங்கிளாக "கர்ஜனை" செய்யும் த்ரிஷா..! தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவாக்குவதே வழக்கம். இந்த வழக்கத்தை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் வர தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையும், ரசிகர் வட்டத்தையும்  நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் தான் பெற்றிருக்கிறார்கள். நயன்தாரா அறம், டோரா. ஐரா , இமைக்கா நொடிகள் என  சிங்கிளாக நடித்து ஹிட் கொடுக்க முடியாமல் போனாலும் தனக்கும் தனி பாணி உருவாக்க  முயற்சித்து வருகிறார் த்ரிஷா. அந்த முயற்சியில் விரைவில் வெளியாக இருக்கும் படம்தான் “கர்ஜனை”. இந்த படத்தை திகில் ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் பாலு. அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ...
அனைவரையும் அசத்தி மிரளவைக்க  வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

அனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      அனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா  சைரா  நரசிம்ம ரெட்டி...! தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. https://youtu.be/brY6B7B9ujs தமிழ் திரைப...
மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..! மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்...
முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..! இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினருக்கு பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் காதலர் பிரபுதேவா படம் இந்தியில் பிளாப் ஆனால் நயன்தாரா ஏன் கவலை அடைய வேண்டும்... என்று யோசிக்கிறீர்களா... இந்தியில் பிரபுதேவா நடிச்ச காமோஷி படம் தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதே இயக்குனர் சக்ரி தான் இரு மொழிகளிலும் இயக்கி இருக்கிறார். அப்ப பதட்டம் இருக்காதா... ஏற்கனவே படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட் தடை விதித்தது. அந்த தடையை சில தினங்களுக்கு முன்பு தான் கோர்ட் நீக்கியது. அப்பாடா சிக்கல் தீந்துடுச்சி... படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு யோசிக்கும்போ...
தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தேர்தலில் ஓட்டு போட வராத நயன்தாரா மீது கடுப்பான கருணாஸ்...! நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமான நடிக, நடிகையரும் வாக்களித்தனர். ஆனால் இதில் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் வாக்களிக்க வரவில்லை. நயன்தாராவை பொதுவெளியில் ராதாரவி கேவலமாக பேசியதாக நடிகர் சங்கத்தில் நயன்தாரா புகார் அளித்தபோது உடனடி நடவடிக்கை எடுத்தார்கள். ராதாரவிக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பினார்கள். விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருந்ததால் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்தும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தாண்டி ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே திமுக நீக்கியதோடு, இதுபோன்ற அநாகரீக பேச்சில் ஈடுபட்டதற்காக ராதாரவியை கண்டித்தது. நயன்தாரா அளித...
வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்...! பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. படத...
அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

அப்பா – மகன் அசத்தும் விஜய்யின் பிகில் செகண்ட் லுக் ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தர பிகில் படத்தின் 2வது லுக் போஸ்டர் அதிகாலையில் வெளியானது. அட்லி இயக்கத்தில் விஜய்- நயன்தாரா நடிக்கும் தளபதி63 படத்தின் பெயர் நேற்று மாலை வெளியானது. பிகில் என தலைப்பு வெளியானதும் விஜய் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினார்கள். அதோடு படத்தில் விஜய் இரட்டை வேஷத்தில் நடிப்பது உறுதியானதால் மகிழ்ச்சி இரட்டிப்பானது. தலைப்பு வெளியான சில மணி நேரம் பிகில் தான் இணையத்தை ஜாம் ஆக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான இன்று அதிகாலை பிகில் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. அதில் 4 விஜய் கெட்டப் இடம் பெற்றுள்ளது. மைக்கேல் என்ற கதாபாத்திர பேருடன் கால்பந்தாட்ட வீரராகவும், காவி வேட்டி கட்டிய ஒரு தாதா கெட்டப்பிலும் படு ஸ்மார்ட்டாக இந்த லுக் காணப்பட்டது. செகண்ட் லுக் போஸ்டரும் வெளியான சில மண...