பாஜக வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…! காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!
பாஜக முழு மெஜாரட்டியுடன் வென்றாலும் மோடி சீட் காலி... நிதின் கட்கரிதான் பிரதமராம்...!
காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்... கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
தேர்தலுக்கு பின் இதுவரை வெளியான எந்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்ட...
