புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: நைஜீரியா

நைஜீரியாவில் வெடிவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி!

நைஜீரியாவில் வெடிவிபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது. இந்த வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர் என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்....
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்கா! கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ள...