வைரஸ் தொற்றால் பலியான ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும் முதல்வருக்கு TMJA கோரிக்கை
*வைரஸ் தொற்றால் பலியான ராஜ் TV ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை*
*ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் வைரஸ் தொற்றால் மரணம். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது*
கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அரசின் காப்பீடு இருக்கிறது. ஆனால், எவ்வித சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் இரவும் பகலுமாக அவர்களுக்கு ஈடாக பத்திரிகையாளர்களும் கொரானா விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்- ஊடகவியலாளர்களின்...
