திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: பிட்காயின்

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்கு ஆசைப்பட்டு தரகரை கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்!

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்கு ஆசைப்பட்டு தரகரை கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 300 கோடி மதிப்புள்ள பிட்காயின் கிரிப்டோகரன்சியை அபகரிப்பதற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தரகரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புனே போலீஸ் கூறியதாவது:- புனே சைபர்கிரைமில் வேலை பார்த்துவந்த கான்ஸ்டபிள் திலிப் துக்ரம் காந்த்ரே என்பவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோகரன்சி தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து பிட் காயினை அபகரிக்க அவர் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 14-ம் தேதி விஜய் நாயக்கை ஹோட்டலில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதை தொடர்ந்து கடத்தப்பட்டவரின் நண்பர் போலீசிடம் புகார் அளிக்க, 8 பேரும் சேர்ந்து கடத்தியவரை சாலையில் விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து விஜய் நாயக் கடத்தியவர்களை அடையாளம் காண்பிக்க அனைவரும் கைது செய்யப்பட...
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்! சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும். இந்த நாணயத்தை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும். இந்த நாணயம் இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த பிட்காயினை சட்டபூர்வ பணமாக மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் ஆக்கி உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 84 வாக்குகளில் 62 வாக்குகள் விழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கெல் ஒப்புதல் அளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,“எல்சல்வடார் அரசு ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டில் வசிக்கிற நம் நாட்டவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவது ...