தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை இருமொழி கல்வியே தொடரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில் இடம்பிடித்துள்ள அம்சங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை பிரதான இடம் பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க முடியு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘தமிழகத்தி...


