சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: போலீஸ் அராஜகம்

சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த போலிஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் பணிமாற்றல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை போதுமானதல்ல. இந்தப் படுகொலை நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள...