ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் திட்டத்தை தொடங்கிய முதல்வர்!
ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்
கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு, கொரானா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரேஷன் கடைகள் வாயிலாக, அனைத்து கார்டுதாரர்களுக்கும், தலா, ஒரு உறுப்பினருக்கு, இரண்டு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை, முதல்வர் இன்று துவக்கி வைத்தார்.
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்டுதாரர்களுக்கு வழங்க உள்ள முக கவசம் கொள்முதல் பணிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை மேற்கொள்கிறது.
அவற்றை வழங்கும் பணி மட்டுமே, ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், முக கவசம் வினியோகம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் த...
