திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: முதல்வர்

திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

திருப்பதியில் சாமி கும்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தனது ஆட்சியை எடப்பாடி மீண்டும் தக்க வைத்து கொண்டார். முன்னதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில் ஆட்சிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டார் பழனிச்சாமி. இதையடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி தேர்தல் வெற்றிக்கும் ஆட்சியை தக்க வைத்ததற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தார்....
பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த  ஜெகன் மோகன் ரெட்டி..!

பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியை மண்ணை கவ்வ வைத்து இமாலய வெற்றியை பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தனது தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற வைத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி 30ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்...
சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

சட்டசபையில் மீண்டும் பரபரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சட்ட பேரவை செயலாளரிடம் திமுக மனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார். ஏற்கனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என ...
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த...
அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

HOME SLIDER, politics, செய்திகள்
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அமைப்...