வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது.

இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அமைப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

356 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன