ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: ops

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார். இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீ...
எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன...
அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தர...
ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

ராயப்பேட்டை அலுவலகத்தில் மோதல்- அ.தி.மு.க.வினர் 48 பேருக்கு போலீசார் சம்மன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக மற்றவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மோதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் யார்? யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி 48 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் நாளையும், நாளை மறுநாளும் நேரில் ஆஜராக வேண்டும் என்று...
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்!

பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர். இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். இந்த நிலையில் ஓ.பன்னீ...
ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார். அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும். தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன. நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்ப...
அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

அதிமுக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது இதையடுத்து தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். அதன்படி நேற்று சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமது தாயாருடன் சென்று நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன். சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செ...
கல்லூரி தேர்வு கட்டண உயர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

கல்லூரி தேர்வு கட்டண உயர்வு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்“ என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் 2 மடங்கு, 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போது தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் த...
சசிகலாவை திடீரென ஓபிஎஸ் தம்பி சந்தித்ததால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு!

சசிகலாவை திடீரென ஓபிஎஸ் தம்பி சந்தித்ததால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்செந்தூர் வந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்தார். திருச்...
பொன்விழா – அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்!

பொன்விழா – அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பொன்விழா - அதிமுக கொடியேற்றிய ஒபிஎஸ், ஈபிஎஸ்! மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சி தொடங்கி இன்றுடன் நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, 50 ஆண்டு தொடங்குகிறது. இதனை அடுத்து அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், இருவரும் அதிமுக கட்சி கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  அது மட்டுமல்லாமல்  மக்கள் தொண்டில் மகத்தான் 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் அதிமுக பொன்விழா சிறப்பு மலர் வ...