Tag: cm

தம்பிதுரைக்கு முதல்வர் ஆசை இருந்தது – TTV தினகரன்

தம்பிதுரைக்கு முதல்வர் ஆசை இருந்தது – TTV தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன். தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன
தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நவம்பர் 22ம் தேதி டெல்லி பயணம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு. “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி.!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின்.  வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி
தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி த
கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். கனமழை எச்சரிக்கை, அரசியல் சூழல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், அது தொடர்பாகவும், கருணாஸ் விவகாரம் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரையில் தொடங்கியது

HOME SLIDER, politics, செய்திகள்
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் காலமானதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுக்களை அ