கொரானா பீதி தமிழக எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் – முதல்வர் உத்தரவு
கொரானா பீதி எல்லையோர 16 மாவட்டங்களில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மார்ச் 31வரை மூட வேண்டும் - முதல்வர் உத்தரவு
மார்ச் 31 ம் தேதி வரை 16 மாவட்டங்களில் வணிக வளாகம், திரையரங்குகளை மூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது.
அம்மாவின் அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வெளிந...



