பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார். டி காக் 19 ரன்னில் வெளியேறினார். இதுவரை சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்று நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் 26 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மந்தமான நிலையிலேயே உயர்ந்தது. சவுரப் திவாரி 15 ரன்னிலும், பொல்லார்டு 6 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
6-வது...

