சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மனுக்கள் உட்படத் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை தொகுதிகள் தோறும் இன்று நடைபெற்றது.
வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்தனர்.
அனைத்து விவரங்களும் முறையாக...

