வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

 

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

தமிழ் சினிமாவில் மதங்களை கிண்டல் அடித்து படங்கள் பெறும்பாலும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நகைச்சுவைக்காக கடவுள் வேஷம் போட்டு நையாண்டி செய்வதும் பின்னர் அது சர்ச்சை ஆனதும் வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான்.

சில தினங்களுக்கு முன் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைப்பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள்.

அதில் தமிழ் கடவுள் முருகன் போல யோகிபாபு பட்டுடையில் கையில் வேலுடன் நிற்க அவருக்கு பின்னால் முருகனின் மயிலுக்கு பதில் வெளி நாட்டு வெள்ளைப்பறவை எட்டிப்பார்த்தபடி இருந்ததை பார்த்து அனைவருமே ஷாக் ஆனார்கள்.

அதைவிட ஷாக்… படத்தின் பெயர் காக்டெயில்… அந்த பெயரின் டிசைனிலும் சரக்கு பாட்டில்கள், மது குப்பிகள் போல இருந்ததுதான்.

வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை ஏற்படுத்த இப்படி ஒரு தோற்றத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். பட நிறுவனம் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என எதிர்ப்பு எழுந்தது.

இருக்காத மத நம்பிக்கை உடையவர்களை யோகிபாபு வும், படக்குழுவும் இழிவு படுத்தி விட்டார்கள் என புகார் எழுந்தது.

இந்த நிலையில் படத்தை வெளியிடும் எஸ்டிசி நிறுவனம் “இந்த விவகாரம் குறித்து படம் தயாரித்த இயக்கிவர்களுடைய கவனத்திற்கு எடுத்து செல்வதாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டது.

மேடைக்கு மேடை எங்கப்பன் முருகன் தமிழ் கடவுள் என்றெல்லாம் குரல் உயர்த்தி பேசும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார். பொதுவாக இது போன்ற சர்ச்சைகளில் முதலில் குரல் கொடுக்கும் சீமானின் மவுனத்தால் மற்ற அரசியல் கட்சிகளும் கருத்து சொல்லாமல் இருக்கிறார்கள்.

1,668 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன