பிரபல நடிகரின் மாப்பிள்ளையின் அறிமுக படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..!
தமிழ் சினிமாவில் காமெடி படங்கள், கருத்துள்ள படங்கள், ஹீரோயிச
, விருது படங்கள் என பலவகைகளில் ரசிகர்கள் பார்வைக்கு வருகிறது.
அதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமலேயே போகிறது. ஒரு சில படங்கள் காட்சியமைப்பிலும், கருத்திலும் புதுமையை புகுத்தி அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் தான் சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87. இந்த படத்தை இயக்கியது விஜய்ஸ்ரீஜி.
இவர் தொழில் வழக்கறிஞராக இருந்தாலும் நல்ல கருத்தை திரைப்படங்களில் மக்கள் மத்தியில் கொண்டுவர முடியும் என்பதால் திரைப்படத்துறையில் நுழைந்திருக்கிறார்.

இவரின் முதல் படத்தில் ஒரு ஹீரோயினை திருநங்கை ஆக காண்பித்து அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்றும், உணர்ச்சிகளை மட்டுமே அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது அதே இயக்குனர் விஜய்ஸ்ரீஜி உலகம் முழுதும் பிரபலமாக உள்ள பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார்.
இதில் பிரபல நடிகர் விக்ரம் சகோதரி மகன் அஜ்மன் ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார். கதைதான் இதில் ஹய்லைட் என்பதால் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, சாந்தினி,ஜூலி,மைம் கோபி, கதிர், திடீர் தளபதி சதீஷ் என பலர் நடித்துள்ளார்கள்.
பப்ஜி படத்தின் பர்ஸ்ட் லுக் தொடங்கி அவர்கள் வெளியிட்ட அனைத்து போஸ்டர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பப்ஜி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா முழு நிர்வாணமாக நடித்ததாகவும், அந்த காட்சி மிக ரகசியமாக படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
கதைக்கு அப்படி ஒரு காட்சி அவசியம் என்பதால் அந்த காட்சி படமாக்கப்பட்டது என்றும் , வழக்கமாக இது போன்ற காட்சிகளில் ஸ்கின் உடை வழங்கப்படும். ஆனால் ஐஸ்வர்யா தத்தா மிக துணிச்சலாக ஸ்கின் உடை எதையும் அணியாமல் நிர்வாணமாக நடித்திருக்கிறார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய இந்த காட்சி படத்தின் மிக முக்கியமான காட்சியாக இருக்கும் என்கிறது விவரம் அறிந்த டீம்.
இந்த நிர்வாண காட்சி படமாக்கப்பட்ட விவரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது.

தாதா87 படத்தைப் போலவே பப்ஜியிலும் ஒரு நல்ல கருத்து இருப்பதாக சொல்லும் படக்குழு ஐஸ்வர்யா தத்தா நிர்வாண காட்சிகள் எல்லாம் ஆபாசமானதல்ல என்றும் சொல்லிக் கொள்வதால்… நல்ல கருத்து எனும் கசப்பான மருந்தை நிர்வாணம் எனும் தேன் தடவி இந்த சமூகத்துக்கு சொல்ல வருகிறதோ என என்னத் தோன்றுகிறது.
படமாக்கப்பட்ட காட்சிகளை சென்சார் எந்தளவுக்கு கத்திரி போடாமல் அனுமதிக்கும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– கோடங்கி
