சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

 

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.


இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கிறார்கள்.

அதோடு இதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன