அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!
'அக்னிதேவி' படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் 'அக்னிதேவி' என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு 'நடிக்க' வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினா...


