செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

அக்னி தேவி விவகாரத்தில் அடாவடி செய்த பாபி சிம்ஹாவுக்கு ரெட் போட திட்டம்!

 

‘அக்னிதேவி’  படம் பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த வாரம் கோலாகலாமாக ரிலீஸாகி, கோபதாபங்களுடன் மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கும் ‘அக்னிதேவி’ என்ற தமிழ்த் திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அக்னி தேவி ரோஜா நாயகி மதுபாலாவின் வில்லி கெட்டப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு, படப்பிடிப்பில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்த பாபிசிம்ஹாவின் டார்ச்சர் தாங்காமல் அவரை தேவையான அளவு ‘நடிக்க’ வைத்து அனுப்பி விட்ட இயக்குநரும், இணைத் தயாரிப்பாளருமான ஜான் தான் நினைத்தபடி, எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் எழுத்தை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கினார்.
டப்பிங் பேச வராமல் முரண்டு பிடித்த பாபிசிம்ஹாவால் மொத்தப் பணமும் முடங்கும் அபாயம் புரிந்து, வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்து ரிலீஸுக்குத் தயாரானார்.
அடாவடி செய்த பாபிசிம்ஹா படம் முடிந்து திரைக்கு வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஈகோ உந்தித் தள்ள ‘ அக்னிதேவி படத்தை வெளியிடக்கூடாது’ என்று தடை கேட்டு புகார் கொடுத்தார்.
இவர் புகாரில் தடைக்கான முகாந்திரம் இல்லாததால் கோர்ட் தடை செய்ய மறுத்து விட்டது. ஆனால், இவர் எல்லா ஊடகங்களிலும் கோர்ட் தடை செய்தததைப் போன்ற தோற்றத்தில் பேசி படத்தின் வசூலைப் பாதிக்க வைக்கப் பெரும்பாடு பட்டார்.
ஆனால், ரசிகர்கள் தெளிவாக இந்த நல்ல படத்தைப் பார்த்து ரசித்து வெற்றிப் படமாக ஆக்கியிருக்கிறார்கள்.

நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வைத்து நடந்த கூட்டத்தில் பாபிசிம்ஹா யாரையும் மதிக்காமல் பேசியதாகவும், சங்க நிர்வாகிகள் கோபத்தோடு அவரது படங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை எனவும், படத்தைக் கெடுக்க கோர்ட் உத்தரவு என்று பொய் சொன்ன பாபிசிம்ஹா மீது தயாரிப்பாளர் வழக்குப் போட்டு பெரிய தொகை நஷ்டஈடு கோரப் போவதாகவும் ஆணித்தரமான தகவல்கள் உலா வருகின்றன.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டாலின் கோவையைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஆர்க்கிடெக்ட் மற்றும் பில்டர். பெரிய பெரிய பிரச்சனைகளை அனாயாசமாகச் சமாளித்த இவருக்கு பாபிசிம்ஹாவைச் சமாளிப்பது பெரிய விசயமில்லை என்கிறது வட்டாரம். ஆனாலும், சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் இவருக்கு முதல் படத்தின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது என்கிறார்கள். சோர்ந்து விடாத இவர் இன்னும் நிறையப் படங்களைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

வளரும் போதே வாலாட்டும் பாபிசிம்ஹாவின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறிக்கு உள்ளாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்க பேச்சுவார்த்தை யில் பாபி சிம்ஹா பிடி கொடுக்காமல் ஆணவ போக்குடன் பேசியதால் ஏற்கனவே பல தயாரிப்பாளர்கள் பாபி மீது புகார் கொடுத்திருப்பதாலும் அவருக்கு ரெட் கார்டு போடலாமா என ஆலோசிக்கப்பட்டது.

340 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன