சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

சூர்யாவின் NGK ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி..!

 

NGK வருமா வராதா… வருமா எப்ப வரும்… இப்படி ரொம்ப நாட்களாக ரசிகர்களின் விடை தெரியா கேள்விக்கு இன்று விடை கிடைத்தது. மே 31 படம் ரிலீஸ் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்து பலர் முகத்தில் கரி பூசி உள்ளது.

சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.’ (‘நந்த கோபாலன் குமரன்’)

இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது.

இதற்கிடையில் இயக்குனருக்கும் நடிகருக்கும் லடாய். பட்ஜெட் எகிறியதால் படம் இப்போது வராது. சூர்யா கோபத்தில் இருக்கிறார் என்றெல்லாம் புளுகு மூட்டைகள் அவிழ்க்கப்பட்டன.

இந்நிலையில் தான் படம் மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

668 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன