வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

பீல்டு அவுட் நேரத்தில் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ராதாரவி குடும்பத்து பெண்களை நினைத்து பரிதாப்படுகிறேன் – நயன்தாரா அறிக்கை

 

ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.


இதையடுத்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவரின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. அறிக்கையில், “பொதுவாக நான் விளக்க அறிக்கை எதுவும் வெளியிடுவதில்லை. என் வேலை என்னை முன்னிறுத்தும். முதலாவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள். ராதாரவி அவர்களின் வெறுக்கும் வகையிலான பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகள்.

இவர் போன்ற ஆட்கள் மீதும் அவர்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.  ராதாரவி இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ராதாரவி போன்ற ஆட்கள் துறையைவிட்டு வெளியேறி கவனம் ஏதும் பெற முடியாமல் போகும் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற ஒரு அற்பமான செயல்களால் பிரபலமடைய நினைக்கின்றனர்.

நீங்கள் எத்தனை எதிர் விமர்சனங்கள் சொன்னாலும் நான் மீண்டும் பேயாக, சீதாவாக, கடவுளாக, தோழியாக, மனைவியாக, காதலியாக என இன்னும் பல கதாபாத்திரங்களை என் ரசிகர்களுக்காக ஏற்று நடிக்கத்தான் போகிறேன்” எனக் !குறிப்பிட்டுள்ளார்.

440 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன