டாக்டர்களுக்கு வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கிய விஷால் தங்கை!
டாக்டர்களுக்கு வைரஸ் தடுப்பு கவச உடைகள் வழங்கிய விஷால் தங்கை!
கொரானா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றம் மூலமாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி வருவதை அறிந்த நடிகர் விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததன் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார்.
இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
பிரபலங்கள் பல்வேறு வகையான நிவாரண உதவிகள் செய்யும் போது மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கவச உடைகளை வழங்கிய விஷாலின் தங்கை உதவியை மருத்துவர்கள் மனதார பாராட்டினார்கள்....
