புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

Tag: ஸ்டாலின் அதிரடி

திமுகவில் அந்தியூர் செல்வராஜூக்கு லக்… வி.பி துரைசாமிக்கு கல்தா!

திமுகவில் அந்தியூர் செல்வராஜூக்கு லக்… வி.பி துரைசாமிக்கு கல்தா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அந்தியூர் செல்வராஜூக்கு லக்... வி.பி துரைசாமிக்கு கல்தா! திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச் செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். ஏற்கனவே அந்தியூர் செல்வராஜ் யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் ராஜ்யசபை எம்.பி.ஆக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை சமீபத்தில் வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார்....
திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் – ஸ்டாலின் அதிரடி

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் – ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் - ஸ்டாலின் அதிரடி திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பான விஷயத்தில், கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி அறிவித்தார்.   மேலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். இந் நிலையில், தி.மு.க.வில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை டிஸ்மிஸ் செய்து மு.க.ஸ்டாலின...