திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இனி அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும...
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- * 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. * கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். * நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். * அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். ...
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது. 2-வது அலை கொரோனா தாக்கத்துக்கு பிறகு படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்று தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து கு...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலா...