செவ்வாய்க்கிழமை, மார்ச் 19
Shadow

Tag: அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் 175 பேருக்குத்தான் அனுமதி!

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் 175 பேருக்குத்தான் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 175 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.   அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் ...
அயோத்தி ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்கள் காணிக்கை!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்கள் காணிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு 24 கிலோ எடையில் வெள்ளி செங்கல்கள் வழங்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார்.  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் ஜெயின் சமூக மக்கள் இணைந்து, அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர். இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூக சாமியார்கள் வழங்கியுள்ளனர்....
நாடே கொரானா வைரஸ் பீதியில் இருக்க அயோத்தி நகரமே  வண்ண விளக்குகளால் மின்னுகிறது!

நாடே கொரானா வைரஸ் பீதியில் இருக்க அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் மின்னுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அயோத்தியில் வரும் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நாளை அயோத்தி செல்கிறார். நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பூமி பூஜை நடைபெறும் தினத்தன்று விளக்கேற்றுவதற்காக சுமார் 1.25 லட்சம் விளக்குகள் ஆர்டர் செய்யப் பட்டிருப்பதாக உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலே நகரம் முழுவதும் விளக்க...
பூசாரி உட்பட 17 பேருக்கு  கொரானா… பதற்றத்தில் அயோத்தி ராமர் கோவில் வளாகம்!

பூசாரி உட்பட 17 பேருக்கு கொரானா… பதற்றத்தில் அயோத்தி ராமர் கோவில் வளாகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அயோத்தி ராமர் கோயில் பூசாரி உட்பட பாதுகாப்பு போலீசார் 17 பேருக்கு கொரானா! அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரானா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தேடி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரானா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் பத்...
அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டும் பூமி பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் - அறக்கட்டளை அறிவிப்பு   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராமர் கோவில்  பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில்...
அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில்... அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைஅறிவித்துள்ளது டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று கருதப்படுகிறது முக்கியமான தகவல்களை எதிர்காலத் சந்ததியினரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே "டைம் கேப்சூல்" தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களும்... அயோத்தி வழக்கில் ...